மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை செல்லும் ரயில்களின் முக்கிய வழித்தடமாக விளங்கும் முக்கிய சாலை என்று அழைக்கப்படுகிறது. தினந்தோறும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10க்கும் மேற்பட்ட பேசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன.
ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக நடைமேடைகளில் சுற்றித் திரிகின்றன. பயணிகளை விரட்டி துரத்தி வருகிறது.
இதனால் குழந்தைகளுடன் வரும் பயணிகள் நாய்கள் தொல்லையால் அச்சம் அடைந்துள்ளனர். ரயில் நிலைய நடைமேடைகளில் சுற்றித் திரிந்து பயணிகளை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை துண்டாக வெட்டிய கணவன்.. ஜார்க்கண்டில் கொடூரம்..