நாகை மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் மீது அதிமுக பிரமுகர் அளித்த நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே முன் பிணை பெறுவதற்காக சென்னை சென்ற தாமஸ் ஆல்வா எடிசனை அங்கு வைத்து காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவரை நாகை அழைத்து வந்தனர்.
அப்போது, நீதிபதி வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் குவிய தொடங்கினர். பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றம் அழைத்துச் செல்லும் வழியில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை காவல் துறையினர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: நில ஆக்கிரமிப்பு பிரச்னையில் தீக்குளித்த விவசாயி மருத்துவமனையில் அனுமதி