ETV Bharat / state

அறநிலையத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி.. - occupied temple site recovered after 6 hours of struggle

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கையகப்படுத்தும் பணியை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் தடுத்து நிறுத்திய நிலையில் 6 மணிநேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கையகப்படுத்தினர்.

அறநிலையத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி

author img

By

Published : Jan 28, 2022, 10:26 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மன்மதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கோயில் பின்புறம் மணவெளி தெருவில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 6,600 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் சம்பந்தம், ராமையா என்பவர்களின் வசம் பல ஆண்டுகள் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன், என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். இருப்பினும், பகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு 14 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி
அறநிலையத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி

அதனடிப்படையில் நேற்று (ஜனவரி 27) இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் மற்றும் அறநிலையத்துறை வட்டாட்சியர் விஜயராகவன் முன்னிலையில் அலுவலர்கள் தியாகராஜன் என்பவர் வசம் உள்ள இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் துவங்கினர்.

அப்போது அங்கு வந்த மயிலாடுதுறை திமுக மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளைத் தடுத்து நிறுத்தி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கமர்ஷியல் கட்டணம் வசூலிப்பதாகவும், அலுவலர்களின் தவறான நடவடிக்கையால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துக்கொள்ளாததால் ராமலிங்கம் எம்பி திரும்பிச் சென்றார். எம்பி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் பிரான்ஸ்வா, குத்தாலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட இடத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்ற பதாகையை வைத்து கம்பிவேலி வைத்து அடைத்தனர். இதன்மூலம் 6 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் குத்தாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு.. சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.