ETV Bharat / state

’திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டின் வில்லன்’ - அர்ஜுன் சம்பத் - திமுகவின் தேர்தல் அறிக்கை

மயிலாடுதுறை: திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய வில்லன் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்
author img

By

Published : Mar 15, 2021, 9:54 AM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இந்து மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: "இந்து மக்கள் கட்சியின் கோரிக்கைகளை ஏற்று கூட்டணியில் இடம் கொடுக்கும் கட்சியை வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த முறை சட்டப்பேரவையில் இந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திட வேண்டும். இந்து விரோதக் கூட்டணியாக இருக்கக்கூடிய திமுகவை முறியடித்திடவே இந்து முன்னணிக் கட்சி தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.

மத்திய, மாநில அரசின் அதிகாரம் தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை ’தமிழ்நாட்டின் கதாநாயகன்’ என ஸ்டாலின் கூறுகின்றார். ஆனால் இது அவர்களுக்கு வில்லனாக அமைந்துள்ள தேர்தல் அறிக்கை" என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத்

திராவிட அரசியலுக்கு மாற்று ஆன்மீக அரசியல் என்ற கருத்தை வலியுறுத்தி வந்த இந்து மக்கள் கட்சி, திராவிடக் கட்சியான அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு, "தேர்தல் அரசியலில் காலத்தின் கோலம் காரணமாகவே அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி உள்ளது. மேலும் அதிமுக இந்து விரோதக் கட்சி அல்ல, இந்து தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் செய்யாத கட்சி. அதனால் அதிமுக கூட்டணியை ஏற்றுள்ளது" என பதிலளித்தார்.

இதையும் படிங்க:’கமல் விரைவில் புரிந்து கொள்வார்’ ; வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.