நாகை: உரிய மீன்படி அனுமதியுடன் நேற்று முன்தினம் (டிச. 14) கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை விசைப்படகுகளுடன் இலங்கை அரசு கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கௌதமன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன், "இலங்கை அரசு தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து வருகிறது. அதனை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
மத்திய மாநில அரசு மீனவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதாக பொய் பரப்புரை செய்து வருகிறது. தமிழ்நாடு மீனவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து பிழைப்பதாக என்னிடம் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். கைது நடவடிக்கை தொடர்ந்தால் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடவோம்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: காலவரையற்ற வேலைநிறுத்தம், அரசு அலுவலகம் முற்றுகை: ராமேஸ்வரம் அப்டேட்