மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் எம்எல்ஏ., போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் களம் காண்கிறார்.
முன்னதாக, திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் நேற்று (மார்ச்.24) மருதம்பள்ளம், காலமநல்லூர், கிடங்கல், மாமாகுடி, ஆக்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். ஒவ்வொரு கிராமத்திலும் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வந்த அவருக்கு, பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், வழி நெடுகிலும் பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பரப்புரையின்போது கூட்டணிக் கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட தோழமை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கண்மாயில் குளிக்கச் சென்ற அக்கா-தங்கை உயிரிழப்பு