மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் இன்று (மே. 8) செய்தியாளர்களைச் சந்தித்த போது, பட்டினப்பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.
பாரம்பரிய நடைமுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
![pattina prevasa function pattina prevasa functions ban lifted Dharmapuram atheenam Dharmapuram atheenam pattina prevasa function Dharmapuram atheenam pattina prevasa functions ban lifted பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம் தருமபுரம் ஆதீனம் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2022-05-08-at-43902-pm_0805newsroom_1652008310_823.jpeg)
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் 22ஆம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டினப் பிரவேசம் நடத்த அனுமதி- தருமபுரம் ஆதீனம் தகவல்