ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி?

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனம்  பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பச்சைக்கொடி

author img

By

Published : May 8, 2022, 2:03 PM IST

Updated : May 8, 2022, 3:11 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆதீன குரு முதல்வர் குரு பூஜையையொட்டி வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதினம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி?

அப்போது தருமபுரம் ஆதீன கர்த்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையில் நேற்றைய நாள் (மே.07) மீண்டும் இந்தப் பட்டினப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு நமது நல்லாசிகள். இந்த விழாவை தொடர்ந்து நடத்தப்படும் என்ற நிலையில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர், செயலர் அனைவருக்கும் எல்லா நலன்களும் வளங்களும் வாழ்த்துகிறோம்.

மரபுவழிபட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவர்கள் என்றைக்குமே மாறுபாடில்லாத வகையிலிருந்தது என்பதே இதன் மூலமாக நிருபித்து காட்டியிருக்கிறார்கள். தமிழ் வழியிலேயே இருந்து அவர்களுடைய முன்னோர்கள் எந்த அளவிற்கு ஆட்சி பீடத்தை நடத்தி கொண்டு அதே வகையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய நாள் இரவு பட்டினப் பிரவேசம் சம்பிரதாயப்படி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு எங்கள் நல்லாசிகள் என்று தெரிவித்தார். ஆன்மிக மறுப்பாளர்கள், அவர்கள் கொள்கையில் இருப்பது போன்று எங்கள் கொள்கையில் நாங்கள் இருந்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது, இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே சுமக்கின்றனர்.

இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைப்பது இந்தப் பல்லக்கு, இதனை எளிமையாக நினைக்கின்றனர், தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் தெரிவித்துள்ளார். பட்டினப் பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை தாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: பட்டினப் பிரவேசம் நடத்த அனுமதி- தருமபுரம் ஆதீனம்

Last Updated : May 8, 2022, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.