மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், கஞ்சாநகரம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், வேண்டிய காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் 50 ஆண்டுகளாக பக்தர்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு, 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் ஆலயம் வரை முட்டியால் நடந்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டும் தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் இத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.
இதையும் படிங்க:NewYear2023: வைத்தீஸ்வரன் கோயிலில் வெளிமாநிலத்தவர்கள் கும்மிகொட்டி சாமி தரிசனம்