நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோடங்குடி - கடக்கம் கிராமத்திற்குச் செல்லும் 5 கி.மீ சாலை பழுதடைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுவரை பழுதடைந்த சாலையை சீரமைப்பதற்காக அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், மயிலாடுதுறையில் இருந்து கடகத்திற்கு சென்று வந்த மினி பேருந்து சாலை பழுதால் எலந்தங்குடி வழியாக செல்வதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பழுதடைந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.