நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 817ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பூம்புகாரை சேர்ந்த 55 வயது பெண், சீர்காழியை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகிய இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வருவாய் துறை ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 453 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 355 பேர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு
நாகப்பட்டினம்: மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.