நாகப்பட்டினம் மாவட்டம் சட்டையப்பர் மேல வீதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்பாபு. இவரின் 10 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், திமுக எம்பி தயாநிதி மாறன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விழுக்காடு அடிப்படையில் முதலமைச்சர் இழப்பீடு வழங்குகிறார். இந்த தொகை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே விவசாயி தற்கொலைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
விவசாயிகள் கேட்ட இழப்பீடு தொகையான ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் விவசாயி உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம். இது போன்ற விபரீத முடிவை எடுக்காமல் விவசாயிகள் மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். திமுக ஆட்சி வந்தவுடன் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கழுத்தை நெரித்த கூட்டுறவு வங்கிக் கடன்: விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை