ETV Bharat / state

பறவை கூண்டில் புகுந்த 6 அடி கோதுமை நாகம்; பறவைகளை விழுங்கியது

மயிலாடுதுறை அருகே விவசாயி வீட்டில் உள்ள பறவை கூண்டில் புகுந்த 6 அடி கோதுமை நாகம், அதில் இருந்த பறவைகளை (லவ்பேர்ட்ஸ்) விழுங்கியதால் நகர முடியாமல் கூண்டில் சிக்கயது.

பறவை கூண்டில் புகுந்த 6 அடி கோதுமை நாகம். பறவைகளை விழுங்கியது

author img

By

Published : Feb 27, 2022, 2:33 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான பாபு வீட்டின் பின்புறம் கூண்டுகள் அமைத்து கோழி மற்றும் லவ்பேர்ட்ஸ் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நள்ளிரவு லாவ்பேர்ஸ் வளர்க்கப்பட்ட கூண்டுக்குள் கொடூர விஷம் கொண்ட 6 அடி நீளம் கொண்ட கோதுமை நாகம் உள்ளே புகுந்துள்ளது.

பின்னர் கூண்டிலிருந்த இரண்டு பறவைகளையும் அடுத்தடுத்து விழுங்கிய நிலையில் கூண்டை விட்டு வெளியேற வழியில்லாமல் கூண்டிலேயே சிக்கியுள்ளது. காலையில் பறவைகள் சப்தம் இல்லாததைக் கண்ட பாபு, கூண்டைப் பார்த்த போதுதான் பறவைகளை விழுங்கிய நிலையில் நாகப்பாம்பு கூண்டில் சிக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து, பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கொடூர விஷம் கொண்ட கோதுமை நாகத்தை லாவகமாகப் பிடித்து பாட்டிலில் அடைத்ததுடன் மக்கள் நடமாட்டமற்ற வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டார்.

பறவை கூண்டில் புகுந்த 6 அடி கோதுமை நாகம்

இதையும் படிங்க:பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து தொடர் புகார்: அரசு போட்ட அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.