ETV Bharat / state

ஹோட்டல் உணவில் கரப்பான் பூச்சி.. "அது கரப்பான் பூச்சி இல்ல சார் வெட்டிக்கிளி" சமாளித்த உரிமையாளர்!

author img

By

Published : May 14, 2023, 8:26 AM IST

மயிலாடுதுறையில் உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உயர்தர சைவ ஹோட்டலில் அதிரடி சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார்.

Cockroach
ஹோட்டலி உணவில் கரப்பான் பூச்சி
ஹோட்டல் உணவில் கரப்பான் பூச்சி..

மயிலாடுதுறை: பட்டமங்கலத்தெருவில் உள்ள புகழ்பெற்ற சைவ உணவகமான காளியாகுடி ஹோட்டல். இந்த ஹோட்டலில் நேற்று சங்கரன்பந்தலை சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், கலியமூர்த்தி ஆகிய இருவர் சோலாபூரி உணவருந்தியுள்ளனர். அப்போது, அவர்கள் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனையடுத்து அவர்கள் உண்ட உணவில் கரப்பான்பூச்சி வெந்து கிடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து ஒவ்வாமை ஏற்பட்ட அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குச் சென்றதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹோட்டலில் சோதனை நடத்தினார்.

அப்போது “உணவில் கிடந்தது கரப்பான்பூச்சி இல்லை வெட்டுக்கிளி” என மெத்தனமாக உணவக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார். பின்னர் சோதனையில் சமையலறை பகுதி தூய்மையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதும், சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

இவ்வளவு அசுத்தமாக இருந்தால் உணவில், கரப்பான், வெட்டுக்கிளி என்ன எலி கூட வரும் எனத் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். பின்னர் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால், உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் இன்னும் 7 நாட்களுக்குள் குறைபாடுகளைச் சரிசெய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை காங்கிரஸ் அமைக்க வேண்டும் - டிகேஎஸ் இளங்கோவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.