ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தமிழ்நாடு அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செல்வராசு எம்.பி., தலைமையில் ஏஐடியுசியினர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், குடிபெயர்ந்த தொழிலாளர்களை தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டனம் தெரிவித்தனர்.
கரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் காவல் துறையினரின் அனுமதியின்றி நாகை எம்.பி., தொழிற்சங்கத்தினருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: டாக்சிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் - ஓட்டுநர்கள் போராட்டம்!