ETV Bharat / state

Crop damage: 'கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' - விவசாயிகள் சாலை மறியல் - பயிர் சேத இழப்பீடு

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என மயிலாடுதுறை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சாலை மறியல்
விவசாயிகள் சாலை மறியல்
author img

By

Published : Nov 17, 2021, 10:20 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் (Northeast Monsoon) பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்ச் சேதங்கள் (Crop damage) குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் முதலமைச்சர் நேற்று (நவ.16) நிவாரணம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டார். அதில், அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை, கார், சொர்ணவாரி பயிர்களில் முழுமையாகச் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கிச் சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்யப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6038 மதிப்பில் இடுபொருள்கள் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் சாலை மறியல்

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயி ராமலிங்கம் கூறுகையில்," குறுவைப் பயிர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹெக்டேருக்கு ரூ.6038 மதிப்பில் இடுபொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு போதாது. உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும். முதலமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Heavy Rain Alert: இன்று இரவு முதல் நாளை இரவு வரை சம்பவம் இருக்கு மக்களே - தமிழ்நாடு வெதர்மேன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.