நாகை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில், பேரூராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை, ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வரும் மயிலாடுதுறை வட்டார மருத்துவ குழுவினர், மணல்மேடு காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் ஆகிய வாரியர்ஸ்ஸூகளின் சேவையை பாராட்டி அனைவருக்கும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு அட்சதை தூவி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு