நாகை மாவட்டத்தில், சமய மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் 32 பேரை பரிசோதனை செய்து 11 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று நாகை காடம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாகை மாவட்டத்தில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மருத்துவரின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து, அவர் தாமாக முன்வந்து கடந்த 7ஆம் தேதி பரிசோதனைக்கு தன்னை உள்படுத்திக் கொண்டார்.
இச்சூழலில், இன்று வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரின் மனைவியின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!