நாகை மாவட்டம், மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சமய மாநாட்டுக்குச் சென்ற ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இதையடுத்து அப்பகுதிக்குச் சீல் வைக்கப்பட்டு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்புகளை ஏற்படுத்தினர். மேலும், அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர் பகுதியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய காரணங்கள் இன்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் வயதானவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ஊரடங்கு வழிமுறை குறித்து முதலமைச்சர் ஆலோசனை!