நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை வழக்கத்தைவிட கூடுதலாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,145 உயர்ந்துள்ளது.
இதில் 614 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 521 பேர் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர், நாளை ஆகஸ்ட் 10 & 11 ஆகிய இரு தினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூடவும், அலுவலர்கள் யாரும் இரண்டு தினங்களுக்கு பணிக்கு வரவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.