மயிலாடுதுறை: சைவ மடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம், தமிழ் வளர்ச்சி, கல்வி, மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு உதவி செய்து சமுதாயத்தில் பெரும்பங்காற்றி வருகிறது.
பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்த கல்லூரி
தருமபுரம் ஆதீனத்தால் 1946ஆம் ஆண்டு, 25ஆவது குருமகா சந்நிதானத்தால் தொடங்கப்பட்ட செந்தமிழ்க் கல்லூரி, இன்று (ஆகஸ்ட் 2) பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தெலங்கான ஆளுநர் பங்கேற்பு
இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியின் பவளவிழா, ஆண்டின் தொடக்க விழா, ஆதீன மடத்தில் நடைபெற்றது.
பவள விழாவில் சிறப்பு அழைப்பாளராக தெலங்கான ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு, மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியுடன் நினைவுப் பரிசு
இதனைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் தமிழிசை ஆசி பெற்றார்.
இதையடுத்து ஆளுநருக்கு ஆதினம் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்