ETV Bharat / state

பொங்கல் பரிசு கரும்பு கொள்முதல்; கூட்டுறவுத்துறை செயலாளர் விடுத்த எச்சரிக்கை! - மயிலாடுதுறை செய்திகள்

சீர்காழி அருகே கரும்பு கொள்முதல் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆய்வில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத்துறை இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கூட்டுறவுத்துறை இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளது - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Dec 31, 2022, 6:00 PM IST

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் சீர்காழி நகரக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.

சீர்காழி நகரக் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி சான்று வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 65 கூட்டுறவு நிறுவனங்களில் 1,217 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் சீர்காழியில் ரூபாய் 13.7 கோடிக்கான கடன் தள்ளுபடி சான்றினை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காகத் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள செங்கரும்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது விவசாயிகள் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்குக் கரும்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்ட அவர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். ஆய்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில்,”பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறை கடந்தாண்டு 10,292 கோடி ரூபாய் இலக்கு கடன் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கூட்டுறவுத்துறை சாதனை படைத்துள்ளது, அதாவது 9 மாதத்திலேயே 10,250 கோடி ரூபாய் 13.29 லட்சம் பேருக்கு கடன் கொடுத்ததாகவும் கூறினார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பற்றி பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், கோதுமையின் அளவை வரும் ஆண்டுகளில் உயர்த்தி வழங்கப்படும்” எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில்,”கடந்த மாதம் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 43.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை அடுத்த வாரம் வந்து சேரும். உடனே பொங்கலுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கள்ளக்குறிச்சி ஆட்சியரின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.