ETV Bharat / state

விசைப்படகுகள் நிறுத்துவதில் மோதல் - சீர்காழியில் சமாதானக் கூட்டம்

author img

By

Published : Jul 25, 2020, 10:08 PM IST

நாகப்பட்டினம்: பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்துவதில் இரு கிராமங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சமாதான கூட்டம் நடைபெற்றது.

compromise meeting for fishermen was held in Sirkazhi

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்துவதில் பூம்புகார் கிராமத்திற்கும், வானகிரி கிராமத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து பிரச்னை எழுந்ததையடுத்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் சமாதான கூட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், துறைமுகத்தில் படகுகள் நிறுத்துவதில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு படகுகளை நிறுத்திக்கொள்ளலாம் எனவும், இனிவரும் காலங்களில் இரு மீனவர் கிராமத்திலும் பிரச்னைகள் ஏற்பட்டால் இரு கிராமமும் ஒன்று சேர்ந்து ஊர் தலைவர்கள் முன்னிலையில் சமாதானம் செய்துகொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் கிராமத்தினர் சுமூகமான தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சமாதானக் கூட்டத்திற்கு பூம்புகார், வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.