ETV Bharat / state

மயிலாடுதுறையில் பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் - மணல்மேடு

மயிலாடுதுறை அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

author img

By

Published : Sep 21, 2022, 1:13 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, கடலங்குடி, திருச்சிற்றம்பலம், வில்லியநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் காலை, மாலை கல்லூரி வருவதற்கும் திரும்ப செல்வதற்கும் போதிய பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் பயணித்தும், படிக்கட்டில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கல்லூரியில் இருந்து பேரணியாக வந்த மாணவர்களை தடுத்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போலீசார் தடுப்பையும் மீறி கல்லூரி அருகே மணல்மேடு வைத்தீஸ்வரன்கோவில் சாலையில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வருவதற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை கடைகளில் சோதனை...குட்கா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.