ETV Bharat / state

சாக்கடையாக மாறிய தெருக்கள்; மாவட்ட ஆட்சியரை சூழ்ந்த பொதுமக்கள்..! - Drainage Problem

நாகப்பட்டினம்: பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் வெளியேறும் கழிவுநீர் குறித்து ஆய்வு செய்த ஆட்சியரை, பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

collector-visited-sewage-discharge-in-the-living-road
author img

By

Published : Nov 7, 2019, 3:37 PM IST

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாளச்சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்காக நகரின் எட்டு இடங்களில் பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் மோட்டார்கள் பழுதடைந்ததால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தக் கழிவுநீரானது மழைநீர் செல்லும் வாய்க்கால்கள், காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றில் சேர்கிறது.

இதனால் மயிலாடுதுறை நகரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் கச்சேரி சாலை, சின்னக்கடைவீதி, கிளை சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடைக் குழாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறியதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளங்கள் உருவாயின. பின்னர் பள்ளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டன.

தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது குறித்து, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மாவட்ட ஆட்சியரை சூழ்ந்த பொதுமக்கள்

இதனையடுத்து, மயிலாடுதுறை நகராட்சியில், கழிவு நீர் சாலையில் ஓடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு பகுதிகளில் ஓடும் கழிவு நீரைக் கண்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சியடைந்தார். பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை சூழ்ந்துகொண்டு தங்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவருக்கு 17 ஆண்டுகள் சிறை!

Intro:மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்தில் வெளியேறும் கழிவு நீர் காரணமாக, சாக்கடையாக மாறிப்போன தெருக்கள், காலை முதல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு, பல்வேறு இடங்களில் வாய்க்கால் போல் ஓடும் கழிவு நீர் கண்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி:-Body:மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நகரின் எட்டு இடங்களில் பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் மோட்டார்கள் பழுதடைந்த நிலையில், வீதிகள் தோறும், கழிவு நீர் தொட்டிகளில் இருந்து வெளியேறி, சாலைகளில், பெருக்கெடுத்து ஓடுகின்றன. அருகில் மழைநீர் செல்லும் வாய்க்கால்கள், காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றில் கழிவு நீர் சென்று சேருகின்றது. இதன் காரணமாக, மயிலாடுதுறை நகரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பலவித நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் கச்சேரிசாலை, சின்னகடைவீதி, கிளை சிறைச்சாலை அருகே என பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறியதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் 20அடி ஆழத்திற்கு பள்ளங்கள் உருவாகி சரிசெய்யப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து வெளியேறும் கழிவு நீரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. வடிவேலு மீம்ஸ் போடும் அளவிற்கு கழிவு நீர் வெளியாகி வந்தது. இது குறித்து, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, மயிலாடுதுறை நகராட்சியில், கழிவு நீர் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு பகுதிகளில் வெள்ளம் போல் பாயும் கழிவு நீர் கண்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சியடைந்தார். பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை சூழ்ந்துகொண்டு தங்களுக்கு சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.