நாகப்பட்டினம்: காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு அறிவுறுத்தலின்படி விசைப் படகுகளிலிருந்து ஸ்பீடு இன்ஜினை முற்றிலும் இறக்கிவிட்ட நிலையில், பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராமங்களிலுள்ள விசைப்படகுகளில் ஸ்பீடு இன்ஜினை வருகிற 24ஆம் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி அக்கரைபேட்டையில் கடந்த 7ஆம் தேதி மீனவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் நகலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மயிலாடுதுறை மாவட்ட தலைமை கிராமம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மனுவாக அளித்தனர்.
மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்பீடு இன்ஜினைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் வருகிற 27ஆம் தேதி எட்டு மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து, அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடியிருப்புக்குள் புகுந்து திடுட்டு: திருடர்களை விரட்டிப் பிடித்த மக்கள்