தமிழ்நாட்டில் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் சீர்காழி தாலுகாவின் சீர்காழி ஊராட்சி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சீர்காழி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை விவேகானந்தா கல்லூரியிலும், கொள்ளிடம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை புத்தூர் அரசு கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது. எனவே, வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே நாயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தேர்தல் புறக்கணிப்பு - ஃபிளக்ஸ் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!