இந்திய நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் ஏதேனும் சதித் திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இலங்கை, மாலத்தீவு, கேரளா உள்ளிட்ட கடல் பகுதிகளின் வழியாக பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி, சுதந்திர தின விழாவை சீர்குலைக்கலாம் என்பதால் கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, நாகை கடலோர பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர், நாகை துறைமுகம், வேளாங்கண்ணி, கோடியக்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதிகளில் புதிதாக சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் மீனவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு