அரசின் திட்டங்களை விவசாயிகள் எளிதாக பெறுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களை முறைப்படுத்தி ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு இணைத்துள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து நாகை மாவட்டம் நீலப்பாடியில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆதரவு முழக்க ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கூட்டுறவு கடன் சங்கங்களை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுடன் இணைத்த மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், மத்திய அரசின் புதிய சட்டத்தினால் கூட்டுறவு கடன் சங்கங்கள் புத்துணர்வு பெற்று இதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என கருத்து தெரிவித்தனர்.