தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுகவுக்காக வாக்கு சேகரித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாகை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டு, இரவு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் பரப்புரை மேற்கொண்டார்.
முதலமைச்சரின் பரப்புரையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், நாகை புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே எந்த பேருந்துகளையும் அனுமதிக்காது, மாற்று வழியை ஏற்பாடு செய்தனர். இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளை அனுமதிக்காமல் மாற்று வழி ஏற்பாடு செய்ததால், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் பயணிகள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க நேரிட்டது.