ETV Bharat / state

'குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கும் எதிரானது' - கே.எஸ் அழகிரி - ஜவஹிருல்லா

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, அரசியலமைப்பிற்கும் எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

constitution-ks-alagiri
constitution-ks-alagiri
author img

By

Published : Mar 1, 2020, 3:36 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.

அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்தியாவிலுள்ள மக்களை காப்பாற்ற வேண்டும் என மோடி நினைத்திருந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்து அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திருக்க வேண்டும். ரூபாயின் நாணய மதிப்பை உயர்த்தியிருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

ஒன்றாகயிருந்த இந்தியாவை அமித் ஷாவும், மோடியும் சேர்ந்து காஷ்மீர், இந்தியா என இரண்டாக பிரித்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

அதன்பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம், குடியுரிமை திருத்த சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, இந்திய அரசியலமைப்பிற்கும் எதிரானது.

1947ஆம் ஆண்டு பல்வேறு துண்டுகளாகயிருந்த இந்திய துணைக்கண்டத்தை காங்கிரஸ் கட்சி ஒன்றாக இணைத்தது. ஆனால் மோடி அரசு ,குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மீண்டும் இந்தியாவை பிரிக்க ஆசைப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு 14, 15 பிரிவு இந்திய நிலப்பரப்பில் வாழ்கிறவர்கள் அனைவரும் இந்தியர்கள் என கூறுகிறது. அதனை பாஜக மாற்றியுள்ளது. அவ்வாறு மாற்ற வேண்டியதற்கான அவசியமில்லை, அதனால் தமிழ்நாடு காங்கிரஸ் அவர்களுடைய செயலை வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

அதைத்தொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும் ஒட்டுமொத்த இந்திய குடிமக்களினுடைய குடியுரிமைக்கு சந்தேகம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

அந்த குடியுரிமை திருத்த சட்டத்தினால் பாதிப்புகள் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்புடையதல்ல.

அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும், அவற்றில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் மாநாட்டில் கலந்துகொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்களது கையில் வைத்திருந்த கைப்பேசி டார்ச்யை எரிய செய்தும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

மாநாட்டின் போது

இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் இரட்டை நிலைபாடு அம்பலபடுத்தப்பட்டுள்ளது - மத்திய சட்டத்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.