ETV Bharat / state

கனமழைப் பாதிப்பு: மயிலாடுதுறையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு! - Chief Minister inspection

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

கனமழை பாதிப்பு: மயிலாடுதுறையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

author img

By

Published : Nov 14, 2022, 3:05 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் கனமழையால் நீரில் மூழ்கியுள்ள சம்பா, தாளடி பயிர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரிடையாக பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 சென்டிமீட்டர் என அதீத கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 200 ஏக்கரில், 87 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

15ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புப்பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 257 கிராமங்கள் பாதிக்கப்பட்டு 2,752 வீடுகள் சேதமடைந்ததால் 58 முகாம்களில் 32,800க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 10 துணை மின் நிலையங்கள்; 2,260 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன; 200 மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 354 மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 80 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிவடைந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மழைநீர் வடியாத நிலையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மழையால் சீர்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பச்சைபெருமாள்நல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தொடர்ந்து அவர்களுக்கு உணவுகளை வழங்கி குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து மாதானம் அருகே உமையாள்பதி கிராமத்தில் நீரால் சூழப்பட்ட குடியிருப்பு காலனி பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களைச் சந்தித்தார். அதே பகுதியில் இடுப்பளவு நீரில் மூழ்கிய சம்பா பயிர்களை நேரிடையாக சென்று பார்வையிட்டார்.

அப்போது மூழ்கிய பயிர்களை எடுத்து வந்து முதலமைச்சரிடம் காண்பித்து வேதனை தெரிவித்த விவசாயிகளிடம், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஆறுதல் கூறினார். சீர்காழி பேருந்து நிலையத்தில் அதீத கன மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 2,000 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பாய், போர்வை மற்றும் மளிகை பொருட்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.

கனமழை பாதிப்பு: மயிலாடுதுறையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

விவசாயிகளின் கோரிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து விவசாயிகள் முதலமைச்சரை சந்தித்து, மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாரதப் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடந்ததால் அந்தத் திட்டத்தை மாற்றி அமைத்து, தெலங்கானா, சத்தீஸ்கரில் கொடுப்பது போல ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் கூறியபோது, ''தமிழ்நாட்டிலேயே கனமழை காரணமாக மயிலாடுதுறை, சீர்காழியில் அதிகப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக, மீட்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக மூன்று அமைச்சர்களை அனுப்பி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசின் அறிவுறுத்தலின்பேரில் அமைச்சர்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தினரின் துரித நடவடிக்கையால் மீட்புப்பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள் மட்டுமல்லாது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வுமேற்கொண்டேன்.

அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பாக மீட்புப்பணியை செய்துள்ளனர். சில குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் இதுவரை எந்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மகிழ்ச்சியாக தான் உள்ளனர். உரிய முறையில் சேதங்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அரசியல் செய்வார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மகிழ்ச்சியாக தான் உள்ளனர்'' என்று கூறினார்.

இதையும் படிங்க: மழை இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.