நாகை மாவட்டத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். முன்னதாக, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடுசெய்த முதலமைச்சருக்கு, பேராலய அதிபர் பிரபாகர் மாதாவின் திருவுருவச் சிலையை பரிசளித்தார்.
இதைத் தொடர்ந்து, நாகூரில் அமைந்துள்ள 460 ஆண்டுகள் பழமையான நாகூர் தர்காவின் தீர்த்தக்குளத்தில் சுற்றுச்சுவர் மழையில் சேதமடைந்ததைப் பார்வையிட்டு தர்கா ஆண்டவர் சன்னிதியில் இஸ்லாமிய முறைப்படி, தொப்பி அணிந்து சிறப்புத் தொழுகையில் பங்கேற்றார்.
பின்னர் மகிழி, கருங்கண்ணி, பலங்கள்ளி மேடு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களைப் பார்வையிட உள்ளார். அதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் செல்ல இருக்கிறார்.
இதையும் படிங்க: புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை!