மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட செட்டிமேடு ஒஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக்பாய்ண்ட் இருந்தது.
ரிக்பாய்ண்ட்க்கு செல்லும் பட்டா இடத்திற்கு வாடகை செலுத்தி கப்பி சாலை அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் பயன்படுத்தி வந்தது.
அந்த கப்பி சாலை வழியாக பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்வதற்கு கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரிக்பாய்ண்ட் பணிகளை முடித்ததால் பட்டா இடத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் சாலையை அடைத்து விட்டார்.
இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுடுகாட்டிற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சுடுகாட்டு சாலையை மீட்டு தருமாறும், சாலையை அகலப்படுத்தி புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி செட்டிமேடு கிராம மக்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என்று கூறியதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: அமிர்தசரஸ் பொற்கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்: கரோனா நீங்க சிறப்பு பிரார்த்தனை!