ETV Bharat / state

கொலை வழக்கு - தரங்கம்பாடி நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் கீழாமூர் ஆற்றுப்படுகையில் மதுராந்தகத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கொலை வழக்கு
செங்கல்பட்டு மாவட்டம் கொலை வழக்கு
author img

By

Published : Jul 20, 2022, 10:09 AM IST

மயிலாடுதுறை: மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டையை சேர்ந்த அய்யனார் (48) என்பவர் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் வீரமுத்து(39) என்பவருடன் மேல்மருவத்தூர் அருகே கீழாமூர் ஆற்றுப்படுகைக்கு கடந்த ஞாயிறன்று சென்றபோது மர்ம கும்பல் 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியதில் அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீரமுத்து பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனை தொடர்பான முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கொலை வழக்கு

இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கலைவாணி முன் காஞ்சிபுரம் திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த உத்திரகுமார் (28) உள்ளிட்ட ஆறு பேர் மாவட்ட நேற்று சரண் அடைந்தனர்.

அவர்களை நாகை சிறையில் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றும் போது தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், தங்களை வெட்ட வந்தபோது தற்காத்துக் கொண்டோம். தப்பி வந்ததே பெரிய விஷயம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உடல் உபாதைகள் ஏற்பட்ட பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.