திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடையன்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராஜீவ் என்பவர் புற நோயாளியாக சிகிச்சை பெற சென்றார். அரசு மருத்துவமனையில் அவர் பெயரை பதிவு செய்துவிட்டு, அவருக்கான பதிவு எண்ணையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய விவரங்களையும் காங்கிரஸ் சின்னமான கை சின்னம் அச்சிடப்பட்ட நோட்டிஸின் பின்புறம் எழுதி வழங்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜுவ் அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கை சின்னம் அச்சிடப்பட்ட நோட்டீசில் மருத்துவமனை பரிசோதனை சீட்டு வழங்க யார் அதிகாரம் கொடுத்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் "-அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
ஏற்கனவே திசையன்விளை அரசு மருத்துவமனை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வருடம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, மருத்துவர்கள் உள்பட பலர் பணியில் இல்லாமல் இருந்தனர். இதனால் அமைச்சர் அவர்களுக்கு மெமோ கொடுத்திருந்தார்.
சமீபத்தில் இரவில் பூனை கடித்ததாக ஒருவர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லாததால் அங்கிருந்த செவிலியர் இடம் மருத்துவர் எங்கே என கேட்டதாகவும் மருத்துவர் இதோ வந்துவிடுவார் அதோ வந்துவிடுவார் என மணிக்கணக்கில் காக்க வைத்தும் கடைசிவரை பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் வரவில்லை எனவும் புகார் எழுந்தது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்