ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல்:68 மில்லியன் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு

அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் லட்சகணக்கானோர் அதிபர் தேர்தலுக்கான தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Image credits-AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 10:04 PM IST

நியூயார்க்: அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு லட்சகணக்கானோர் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

நியூயார்க் நகரின் எண்.42 பிராட்வே என்ற முகவரியில்தான் அமெரிக்க தேர்தல் வாரியம் இயங்கி வருகிறது. தேர்தல் வாரியத்தின் செயல் இயக்குநராக இருக்கும் மைக்கேல் ராயன், "நியூயார்க் நகரில் மட்டும் முன்கூட்டியே 1,40,000 பேர் வாக்களித்துள்ளனர்," என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா முழுவதுமே லட்சகணக்கானோர் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகத்தின் கண்காணிப்பு தரவின்படி 68 மில்லியன் அமெரிக்க மக்கள் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

வாக்குப்பதிவு நாளான நவம்பர் 5ஆம் தேதி வாக்குச்சாவடியில் கூட்டத்தை தவிர்க்கவும், மேலும் வாக்குப்பதிவு நாளன்று மழை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் வாக்காளர்கள் வாக்களிக்க தவறக்கூடும் என்பதால் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. அதன் படி கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக 100 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அதைவிடவும் 50 சதவிகிதம் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.