ETV Bharat / state

சிசிடிவி: அதிமுக பிரமுகர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

அதிமுக பிரமுகர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் பட்டப் பகலில் திருடுபோன சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி வைரல்..!

author img

By

Published : Aug 9, 2022, 10:39 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை டூ கும்பகோணம் செல்லும் குத்தாலம் சாலையில் மல்லியம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹீர் (33) இவர் அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளராக உள்ளார். இவர் இன்று மாலை சித்தர்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று தனது மகளை அழைத்துக் கொண்டு மல்லியத்தில் உள்ள தனது வீட்டிற்கு பல்சர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் மகளை அழைத்து உள்ளே சென்றுள்ளார். உடனடியாக வாகனத்தில் சாவி இருப்பதை எடுக்க வெளியே வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அபுதாஹீர் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை எடுத்து பார்த்து உள்ளார். அதில் தனது இருசக்கர வாகனத்தை இரண்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து திருடி சென்றது தெரியவந்தது.

அதில் ஒரு நபர் ஹெல்மட் அணிந்து மற்றொருவர் முகக்கவசம் அணிந்தும் திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குத்தாலம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவது தொடர் கதையாக இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரி முதலமைச்சர் டெல்லியில் முகாம் - பிரதமரிடம் கூடுதல் நிதிக்கு கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.