கரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குவதற்கும், சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. கரோனா அச்சமின்றி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பள்ளிக்கு செல்கின்றனர்.
அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் கற்பித்தலுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!