ETV Bharat / state

'தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் போராட்டம்' - காவிரி தனபாலன் - கெயில் நிறுவனம்

நாகை: சட்ட விதிமுறைகளை மீறி விளைநிலங்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை தடுத்து நிறுத்தாவிட்டால், தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காவிரி தனபாலன் கூறியுள்ளார்.

காவிரி தனபாலன்
author img

By

Published : May 20, 2019, 9:19 AM IST

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே முடிகண்ட நல்லூர் கிராமத்தில் குறுவை சாகுபடி பயிர்களை நாசப்படுத்தி வேல் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கெயில் குழாய் பதிக்க அனுமதி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவைகள் கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோகார்பன் எடுக்கும் வேதாந்தா நிறுவனம் போன்ற எந்த நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கமாட்டோம் தடுப்போம் என்று கூறிதான் தேர்தலில் ஓட்டு வாங்கி இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு கட்சி வெற்றி அடையும்போது இந்த பகுதியில் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என்பதால் தந்திரமாக சட்டத்திற்கு புறம்பாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் செய்கிறது. விவசாயிகளின் வயலில் உள்ளே இறங்க வேண்டுமென்றால் விவசாயிகளிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். அப்படி கடிதம் பெறாமல் சர்வாதிகாரமாக இறங்குவது மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.

காவிரி தனபாலன்

தமிழ்நாட்டிற்கு உணவு அளிக்கக் கூடிய டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யும் நிலத்தை கெயில் நிறுவனம் அழிக்கிறது. அதற்கு காவல்துறை துணைபோகிறது. காவல்துறை அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணியை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் விதிமுறை முடிந்தவுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.

Intro:சட்ட விதிமுறைகளை மீறி விளைநிலங்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை தடுத்து நிறுத்தாவிட்டால், தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காவிரி தனபாலன் பேட்டி:-

Body:நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே முடிகண்ட நல்லூர் கிராமத்தில் குறுவை சாகுபடி பயிர்களை நாசப்படுத்தி வேல் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் பார்வையிட்டார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
தமிழக அரசு சட்டமன்றத்தில் கெயில் குழாய் பதிக்க அனுமதி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது. தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோகார்பன் எடுக்கும் வேதாந்தா நிறுவனம் போன்ற எந்த நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்க மாட்டோம் தடுப்போம் என்று கூறி தான் ஓட்டு வாங்கி இருக்கிறார்கள். ஏதோ ஒரு கட்சி வெற்றி அடையும் போது இந்த பகுதியில் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என்பதால் தந்திரமாக சட்டத்திற்கு புறம்பாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் செய்கிறது விவசாயிகளின் வயலில் உள்ளே இறங்க வேண்டுமென்றால் விவசாயிகளிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும் அப்படி கடிதம் பெறாமல் சர்வாதிகாரமாக இறங்குவது மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும் தமிழகத்திற்கு உணவு அளிக்க கூடிய டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யும் நிலத்தை கெயில்
நிறுவனம் அளிக்கிறது அதற்கு காவல்துறை துணை போகிறது என்னுடைய நிலத்தில் இறங்கியதற்கு விவசாயி போலீசில் புகார் அளித்தது இதற்கு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் மாறாக அதனை தடுத்த விவசாயியை கைது செய்து ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி இருக்கிறார்கள் இது கண்டனத்திற்கு உரியது விவசாயிகள் கேவலமானவன் இளிச்சவாயன் என்பதற்கு இந்த செயல் முன்னுதாரணம் காவல்துறை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தேர்தல் விதிமுறை அமுல் என்பது அவர்களுக்கும் உண்டு அனுமதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் தேர்தல் விதிமுறை முடிந்தவுடன் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.