நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை கடல் பகுதியில், கரை ஒதுங்கிய 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன், கார்த்தி, சிவானந்த், செல்வம் ஆகிய நால்வரும் கைப்பற்றி பதுக்கியுள்ளனர்.
இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல்செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கஞ்சா கடற்கரையில் ஒதுங்கியதா அல்லது விற்பனைக்கு வேறு யாரிடமாவது இருந்து பெறப்பட்டதா? என்ற சந்தேகம் காவலர்களுக்கு எழுந்துள்ளது.