ETV Bharat / state

நாகையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சட்டங்களைக் கண்டித்து இருசக்கர வாகன பேரணி

நாகை: மயிலாடுதுறையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சட்டங்களைக் கண்டித்து அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இருசக்கர வாகன பேரணி
motorcycle rally at nagapattinam
author img

By

Published : Mar 4, 2020, 11:17 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), குடியுரிமை பதிவேடு சட்டம் (என்.ஆர்.சி) மற்றும் மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) சட்டத்தைக் கண்டித்து அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பரப்புரை பேரணி நடைபெற்றது.

நாகையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சட்டங்களைக் கண்டித்து இருசக்கர வாகன பேரணி

பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அரசு கட்சி, சாதி ஒழிப்பு முன்னணி, இந்திய தேசிய லீக், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் வேலு.குபேந்திரன் பேட்டி

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஓட்டினர். முதல் நாள் பேரணி வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி வழியாக கொள்ளிடம் வரை சென்று மீண்டும் மயிலாடுதுறை வந்தடைந்தது.

இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' - இயக்குநர் கௌதமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.