கரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள்ளே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
மேலும், அனைத்து கடைகளும் மூடப்பட்டு, அரசுப் பேருந்துகள் ஏதும் இயக்கப்படாமல் இருந்தன. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பொறையார் பகுதிகளில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கை மீறிய கடை உரிமையாளர்கள்: கண்டுகொள்ளாத காவல் துறை!