சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தைக்கால் பள்ளி வாசலுக்கு ஆச்சாள்புரத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கருனாகரன் என்பவர் பெயரில் கடிதம் ஒன்று வந்தது.
அதில், இந்த மாதம் கடைசியில் உங்கள் பள்ளி வாசலில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிக்க போகிறது என்றும், இதற்காக ஆச்சாள்புரத்தை சேர்ந்த தமிழ்வளவன், வல்லம் படுகையை தமிழ்வளவனின் மச்சான் ராஜா ஆகியோர் தங்கள் உறவினர்கள் வீட்டின் பின் புறத்தில் வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், கண்ணி வெடிகள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதற்காக தமிழ்வளவனும், ராஜாவும் ஒரு கோடியே 74 லட்சம் வாங்கியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்த பள்ளி வாசல் நிர்வாகத்தினர், பாதுகாப்புக்கோரி கொள்ளிடம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், அந்தக் கடிதம் வெறும் வதந்தியா அல்லது பழிவாங்கும் செயலா கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.