மயிலாடுதுறை மாவட்டம் நயினார்தோப்பு கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணமுடியவில்லை.
பின்னர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது காவல் துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை