நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில்,
"நாகை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அதன்படி கடந்த சிலவாரங்களாக, தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஒன்றாம் தேதி முதல் இன்றுவரை அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் குணப்படத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரு குழந்தை மட்டும் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறது. அக்குழந்தை இன்று அல்லது நாளைக்குள் குணப்படுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், படுக்கை பற்றாக்குறை இங்கு நோயாளிகளுக்கு சிரமத்தை அளிக்கிறது, அதை விரைவில் சரிசெய்ய மருத்துவநிலைய அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.