நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 12) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்டத்தின் எல்லை வரைமுறை செய்வதற்கான சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் லலிதா என்பவரையும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதாவையும் நியமித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் நகர பாஜக அலுவலகம் முன்பு திரண்ட அக்கட்சியினர், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், நகர தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலர், எஸ்பி நியமனம்!