ETV Bharat / state

மயிலாடுதுறையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பறையில் வைத்து சீல்! - வாக்குப்பெட்டிகள் காப்பறையில் வைத்து சீல்

மயிலாடுதுறை: மூன்று தொகுதிகளிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பறையில் வைத்து தேர்தல் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

வாக்குப்பெட்டிகளை காப்பறையில் வைத்து சீல் வைத்து தேர்தல் அலுவலர்கள்

author img

By

Published : Apr 7, 2021, 3:38 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நேற்று (ஏப்.6) இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குப்பெட்டிகளை காவல் துறையினரின் பாதுகாப்புடன் மயிலாடுதுறை மன்னம்பந்தலிலுள்ள ஏவிசி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மயிலாடுதுறை தொகுதியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஏவிசி பொறியியல் கல்லூரியிலும், சீர்காழி தொகுதியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஏவிசி கலைக்கல்லூரியிலும், பூம்புகார் தொகுதியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பெட்டிகளை காப்பறையில் வைத்து சீல் வைத்து தேர்தல் அலுவலர்கள்

அவை சட்டப்பேரவைத் தொகுதி பொதுப்பார்வையாளர்கள் ராஜ்குமார் யாதவ், ஏ.பி.படேல் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் காளியம்மாள், பிற கட்சிகளின் முகவர்கள் கலந்து கொண்டனர். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள காப்பறையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 72.78 விழுக்காடு வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.