மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திப் பெற்ற தொன்மைவாய்ந்த அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இது அபிராமி பட்டராலும் சமயக்குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆகும். இக்கோயிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வந்த நிலையில், கோயிலின் பல பாகங்கள் சேதமடைந்து காணப்பட்டன.
இதையடுத்து கோயிலில் திருப்பணிகள் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. அவ்வகையில் கோயிலில் அமைந்துள்ள ஐந்து ராஜகோபுரங்களுக்கு, தருமபுர ஆதீன குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர், ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிவாசி முத்துக்குமாரசுவாமி, தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க...மூடப்பட்டுள்ள திருக்கடையூர் கோயில் - வாழ்வாதாரம் இழந்துள்ள வியாபாரிகள்!