ETV Bharat / state

குளத்தில் வீசி செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை! - மயிலாடுதுறை செய்திகள்

மயிலாடுதுறை குத்தாலம் அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் இறந்து மிதக்கும் பச்சிளம் ஆண் குழந்தை  குளத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை  மயிலாடுதுறை குத்தாலத்தில் குளத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை  பச்சிளம் ஆண் குழந்தை  குற்றச் செய்திகள்  சிசு கொலை  கொலை  கொலை வழக்கு  குழந்தை கொலை  child death  murder news  murder case  mayiladuthurai latest news  mayiladuthurai news  mayiladuthurai baby boy was murdered by thrown in to a pool  baby boy was murdered by thrown in to a pool in kuthalam  baby boy murdered  crime news  மயிலாடுதுறை செய்திகள்  ஆண் குழந்தை
குழந்தை
author img

By

Published : Jul 28, 2021, 12:50 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில், பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மிதந்துக்கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் குழந்தையின் உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குளத்தில் வீசி சென்றார்கள், எப்படி குழந்த இறந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து சில மணி நேரமான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தை, குளத்திலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கல் நெஞ்சம் கொண்டோரையும் கலங்கச் செய்வதாக அமைந்தது.

இதையும் படிங்க: ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பதுக்கல் - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.